Tuesday, 22 February 2011

மகிழ்ச்சியே ஒரு பிரார்த்தனை !

Translation of the article " Happiness is a prayer" from FROZEN THOUGHTS, Collector's Edition, 2011.

மகிழ்ச்சியே ஒரு பிரார்த்தனை !  
" நாளை மதியம் சரியாய் 3 மணிக்கு நான் உங்கள் மீது கோபம் கொள்வேன்!" என்று நான் சொன்னால், நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்களா?  நாளை மாலை என தள்ளிப் போட்டு பின்பு கோபப்பட முடியுமா?  முடியாதல்லவா? அப்புறம் எப்படி மகிழ்ச்சியை மட்டும் தள்ளிப் போடமுடியும் ?

 மகிழ்ச்சி என்பது நமக்கு, " எனக்கு இது கிடைத்தால், அப்போது சந்தோஷப்படுவேன்.  எனக்கு அது கிடைத்தால், அப்போது மகிழ்ச்சியடைவேன்.." என்பதான தர்க்க சமன்பாடாய் ஆகிப்போனது.


இப்போது, இந்தக் கணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் அல்லது மகிழ்ச்சியாய் இல்லை. அவ்வளவே.

சந்தோஷப்படுங்கள். நீங்கள் மனிதனாய் பிறந்திருக்கிறீர்கள். பிரியமானவர்கள் உங்களை சூழ்ந்திருக்கிறார்கள். . உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க உறைவிடமும் இருக்கிறது உங்களுக்கு.

எத்துணைப் பேறு பெற்றிருக்கிறீர்கள் என்று எண்ணி பாருங்கள். எண்ணிக்கையில் எண்ணிப் பாருங்கள்.
மகிழ்ச்சியடையுங்கள்.

உங்கள் குறிக்கோள்கள் எட்டப்படவேண்டும், கனவுகள் மெய்ப்பட வேண்டும். ஆனால், மகிழ்ச்சியாய்  வளர்சியடையுங்கள்.  சந்தோஷமாய் உயருங்கள்.  கனவுகளையும், குறிக்கோளையும் மகிழ்ச்சியாய் அடையுங்கள்.

எல்லாம் வல்ல இறைவனிடம் நீங்கள் செய்யும் பிரார்த்தனை, வார்த்தைகளின் மூலம் அல்ல, உள்ளிருந்து நிரம்பி வழியும் மகிழ்ச்சியின் மூலமாய் இருக்கட்டும் !

: மூலமும், தமிழாக்கமும் - பரமன் பச்சைமுத்து

http://www.frozenthoughts.com/latest_issue.html

No comments:

Post a Comment